செய்யாறில் பொங்கல் கோலம் போட்ட கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      திருவண்ணாமலை

தி.மலை: பொங்கல் பண்டிகைக்காக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் ண்டிருந்த கர்ப்பிணி திடீரென மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30) மசாலா வியாபாரி. இவரது மனைவி ஆனந்தி (22) திருமணமாகி ஓராண்டாகிறது. தற்போது ஆனந்தி 6 மாத கர்ப்பினியாக இருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆனந்தி தனது வீட்டு வாசலில் தாய் லலிதாவுடன் கோலம்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கிவிழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் லலிதா மகளை மீட்டு உடனடியாக செய்யாறு அரசு மருத்தவமனையில் கிசிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவத்துள்ளார். இதுகுறித்து லலிதா மோரணம் காவல்நிலையத்தில் புகார செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஆனந்திக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதா£ல் செய்யாறு சப்கலெக்டர் பிரபு சங்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: