எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்:நாளை அரக்கோணத்தில் நடக்கிறது

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      திருவண்ணாமலை

அரக்கோணம்:100வது எம்ஜிஆரின்; பிறந்தநாள் பொதுக்கூட்டம்  நாளை (18ந் தேதி) அரக்கோணத்தில் நடக்கிறது. மாவட்ட இரு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து விவரம் வருமாறு.      வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் நகர அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் பழனிபேட்டை பகுதி அண்ணா சிலை அருகில் நாளை (18ந் தேதி) மாலை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் ஆர்.பத்மநாபன் தலைமை தாங்கவும். முன்னாள் கவுன்சிலர் பெர்பார்த்தீபன் வரவேற்புரை ஆற்றிடவும் உள்ளார்கள்.      கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் திருநாராயணன், கழக பேச்சாளர் விஸ்வலிங்கம், சோளிங்கர் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான் என்.ஜி.பார்த்திபன், எம்பி.கோ.அரி, சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி, அரக்கோணம் நகர செயலாளர் துரைகுப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் கண்ணதாசன், உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிடவும் உள்ளனர். இறுதியில் வட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறுகிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: