முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய திருப்புமுனையாக ரஷியா மீதான பல தடைகளை நீக்க டொனால்ட் டிரம்ப் முடிவு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்கா - ரஷியா விவகாரத்தில் புதிய திருப்புமுனையாக ரஷியா மீதான பல்வேறு தடைகளை நீக்க அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

பனிப்போர்
பொருளாதாரப் போட்டியில் தொடங்கி அணு ஆயுதப் போட்டி வரை இடைப்பட்ட பல்வேறு துறைகளில் ரஷியாவை விழுங்கி ஏப்பம்விட அமெரிக்காவும், அமெரிக்காவை தவிடுப்பொடியாக்க ரஷியாவும் காலகாலமாக முயன்று வருகின்றன. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளை ரஷியாவும், ரஷியாவின் நேச நாடுகளை அமெரிக்காவும் பரம விரோதிகளாக பாவித்து வருகின்றன.

அமெரிக்கா எதிர்ப்பு
சமீபத்தில், சிரியா மற்றும் உக்ரைன் உள்நாட்டுப் போரில் ரஷியாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது நினைவிருக்கலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த ஐந்தாண்டுகளில் ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் தீர்மானம்
இந்நிலையில், ரஷியா விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது:-

மக்களுக்கு நன்மை
அமெரிக்காவின் தடைகளால் ரஷியா மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகிறது. பல்வேறு தடைகளுக்கு உள்ளாகியுள்ள ரஷியா விவகாரத்தில் சில நல்ல மாற்றங்களை செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டியுள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு நன்மை ஏற்படும் என நான் கருதுகிறேன். இந்த முயற்சியின் ஒருகட்டமாக தங்களது அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டு, அணு ஆயுத பலத்தையும் படிப்படியாக ரஷியா குறைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடும் எதிர்ப்பு
டிரம்ப்பின் பேட்டி நேற்றைய நாளிதழில் வெளியானதும், அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் தலைவர் ஜான் பிரெனான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியாவைப் பற்றியும் அந்நாட்டின் நோக்கம், செயல்பாடு மற்றும் முழு ஆயுத பலம் போன்றவற்றைப் பற்றியும் டொனால்ட் டிரம்ப்பால் இன்னும் முழுமையாக மதிப்பிட முடியவில்லை என்பதையே அவரது கருத்து சுட்டிக் காட்டுகிறது என ஜான் பிரெனான் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்