முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணும் பொங்கலை யொட்டி:கறிக்கடைகளில் விற்பனை ஜோர்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      சேலம்

சேலம்:காணும் பொங்கல் தினமான கறிநாளை யொட்டி சேலத்தில் கறிக்கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. வீடுகளை வெள்ளையடித்து சுத்தம் செய்து பழைய பொருட்களை அப்புறப்படுத்தினர். சனிக்கிழமை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. நேற்று மாட்டுப்பொங்கல் என்பதால் வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி அதற்கு பூஜை செய்தனர்.இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக மட்டன், சிக்கன், மீன் போன்ற உணவுகளை பொதுமக்கள் சாப்பிட வில்லை. இதனால் மட்டன், சிக்கன், மீன் கடைகளில் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. சில்லி சிக்கன் கடைகளில் வியாபாரம் படுத்தது. இன்று கறிநாள் என்பதால் சேலத்தில் காலை முதலே கறிக்கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் முனியப்பன் கோயில்களில் ஆடு வெட்டி பூஜை செய்தனர். கடைகளில் ஒரு கிலோ மட்டன் ரூ.460க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிலோ கோழிக்கறி ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது. அணை மீன்கள் ரூ.140 அளவில் விற்பனை செய்யப்பட்டது. கறிநாளை யொட்டி சேலம் கரியபெருமாள் கரட்டில் நேற்று  மக்கள் கூடம் அதிகளவில் காணப்பட்டது. வீட்டில் சமைத்த பொருட்களை கரியபெருமாள் கரட்டிற்கு கொண்டு வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்