முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பனியில் சிக்கிய எஜமானரை காப்பாற்றிய நாய் !

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

சிகாகோ  - உறைந்து கிடந்த பனிக்கட்டிக்குள் சிக்கிய எஜமானரை விசுவாசத்தின் அடையாளமாக அவர் உடல் மீது படுத்து நாய் காப்பாற்றியது.

கடும் பனி
அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் பெடோங்கி பகுதியை சேர்ந்தவர் பாப்(64) இவர் தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். தற்போது மிசிகனில் கடுமையான பனி கொட்டுகிறது. எனவே தீமூட்டி குளிர்காய விறகுகள் சேகரிக்க சென்றார். அவர் கெல்சி என்ற செல்ல நாயை வளர்த்து வருகிறார். 5 வயதான நாய் எப்போதும் அவருடன் இருக்கும்.

பக்கவாதம்
சம்பவத்தன்று விறகு பொறுக்கும் போது நாய் கெல்சியும் உடன் சென்றது. அப்போது பாப் கால்தவறி கீழே விழுந்து விட்டார் இதனால் அவரது கழுத்து எலும்பு முறிந்ததால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது. எனவே அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பனி கொட்டிக்கொண்டே இருந்தது. உதவிக்கு அழைத்தும் யாரும் அங்கு வர முடியாத சூழ்நிலை இருந்தது.

காப்பாற்றியது
இதற்கிடையே தொடர்ந்து பனி மழை பெய்ததால் குளிரில் அவர் நடுங்கினார். உடனே நாய் கெல்சி போர்வை போன்று அவர் உடல் மீது படுத்து சூடுபடுத்தியது. 24 மணி நேரம் அவரது உடல் மீது அரணாக படுத்திருந்து காப்பாற்றியது. பின்னர் அவரது முகம் மற்றும் கைகளில் தனது நாக்கினால் நக்கி எழுப்பியது. அதன் பின்னர் அந்த வழியாக வந்த நபர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். கடும் குளிரில் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய் கெல்சியை பாப் உள்பட அனைவரும் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்