2,598 ஆராய்ச்சி திட்டங்கள் வெளியிட்டு விஐடி நாட்டில் முதலிடம்:வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பாராட்டு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      வேலூர்

வேலூர்:கடந்தாண்டில் 2,598 ஆராய்ச்சி திட்ட இதழ்கள் வெளியிட்டதில் விஐடி பல்கலைக்கழகம்  நாட்டில்  உள்ள முன்னணி பல்கலைக்கழங்களை முந்தி  முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக விஐடி பேராசிரியர்கள் மற்றும்  ஆராய்ச்சி மாணவர்களை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பாராட்டியுள்ளார்.சர்வதேச தரத்தில் உயர்கல்வி வழங்கிவரும் விஐடி பல்கலைகழகம் கற்பித்தல் ஆராய்ச்சி பணிகள் உள்கட்டமைப்பு  உள்ளிட்ட பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளமைக்காக மத்திய மணித வள மேம்பாட்டு அமைச்சகம் தரவரிசை பட்டியலில் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் விஐடி  முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வின் மூலம் அறிவித்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரமான உயர்கல்வி வழங்கிவருவதுடன் கற்றல் கற்பித்தல் முறையில் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் வகையில் 2010ஆண்டு முதல்  ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதற்காக சர்வதேச தரத்திலான ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 2010 ம் ஆண்டில் 441ஆராய்ச்சி அறிக்கை இதழ்களை வெளியிட்ட விஐடி ஆராய்ச்சி பணிகளில் காட்டிய தீவிர முயற்சியின் காரணமாக படிப்படியாக உயர்ந்து 2013 ல்1,704, 2014 ல் 2,015 ம், 2015 ல் 2,402 கடந்த 2016ம் ஆண்டில் 2,598 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டில் நாட்டில் உள்ள ஐஐஎஸ்சி (IISC) ஐஐடி (IIT) க்களை முந்தி விஐடி  முதலிடம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி அறிக்கை இதழ்கள் வெளியிட்டதில் நாட்டில் விஐடி பல்கலைக்கழகம் முன்னணி பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ள  விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன்  இத்தகைய சிறப்புக்கு விஐடி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கடின முயற்சி மற்றும் அர்பணிப்பே என்று கூறியுள்ளார். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பதிய உற்பத்திகளுக்கான ஆராய்ச்சி பணிகளுக்கு விஐடி முக்கியத்துவம் அளித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: