முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

Akhilesh acting at the behest of Ramgopal, alleges Mulayam

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக் னோ  -  என் தம்பி ராம் கோபால் யாதவ் விருப்பப்படி எனது மகன் அகிலேஷ் யாதவ் ஆடுகிறார் என்று சமாஜ் வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார். ராம் கோபால் யாதவ் பா.ஜ.கவின் உத்தரவுப்படி செயல்படுகிறார் என்றும் முலாயம்  கூறினார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம் மாநில முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார். அவருக்கும்  முலாயமின் தம்பியும் கட்சியின் மாநில தலைவருமான சிவ்பால் யாதவுக்கும் இடையே கடுமையான மோதல் உள்ளது. இதனால் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள மாநில சட்டமன்ற தேர்தலில் அகிலேஷீன் ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட சிவ்பால் யாதவ் வாய்ப்பு அளிக்க வில்லை. இதனால் அகிலேஷ் தனது தந்தையும் , கட்சியின் நிறுவனருமான முலாயமிடம் தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார். மேலும் கட்சி தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு போட்டியாக ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த போக்கின் காரணமாக கடும் கோபம் அடைந்த முலாயம் சிங் யாதவ் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் மற்றொரு தம்பியுமான ராம் கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து 6ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொந்தளித்த அகிலேஷ் யாதவ் சமாஜ் வாடி கட்சி எனது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என கட்சியின் தேசிய கூட்டத்தை கூட்டினார். அவர்  கட்சியின் பொதுச் செயலாளரான ராம் கோபால் யாதவ் மூலமாக இந்த கூட்டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் சிவ்பால் யாதவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில் சமாஜ் வாடி உடைந்தது. முலாயம் சிங் தலைமையில் ஒரு அணியும், அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒரு அணியும் உருவானது. அகிலேஷ் யாதவ் கூட்டிய கட்சி தேசியக்கூட்டத்திற்கு பெருமளவு தொண்டர்கள் , மூத்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். முலாயம் சிங்கிற்கு நெருக்கமாக உள்ள தலைவர்கள் கூட் அகிலேஷ் யாதவ் அமர்ந்திருந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

இதற்கிடையே கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். இருவரும் தங்களது அணிக்கே பெரும் ஆதரவு உள்ளது. எனவே கட்சியின் சின்னம் தங்களுக்கே தர வேண்டும் என கோரினார்கள் இது குறித்த முடிவை தற்போது தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் , முலாயம் சிங் யாதவ் நேற்று கூறியதாவது,
  எனது மகன் எனது ஆலோசனைக்கு மதிக்காமல் நடந்தால் அவரை எதிர்த்து போரிடுவேன் . முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகிறேன். மாநில போலீஸ் டி.ஜி.பியாக ஒரு முஸ்லீம் வரவேண்டும் என்ற விருப்பம் கொண்டவன். ஆனால் , அகிலேஷ் யாதவ்  அப்படி நினைக்கவில்லை. ஒரு முஸ்லீம் மாநில போலீஸ் டி.ஜி.பியாக வர அவர்  விரும்ப வில்லை.இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.  அகிலேஷ் யாதவ் எனது தம்பி ராம் கோபால் யாதவ் விருப்படி ஆடுகிறார்.எனது ஆலோசனைகளை கேட்காத அகிலேஷ் யாதவ் கடந்த 15 நாட்களாக என்னிடம் பேசவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago