முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் டாப் இடத்தை பிடித்த அலங்காநல்லூர்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரம்,  நேற்றைய ட்விட்டர், பேஸ்புக் டிரெண்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்ட வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கலையொட்டி நிச்சயமாக நடக்கும் என நம்பியிருந்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அரசியல், சாதி, மொழி, மதங்களைக் கடந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை ஆதரித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போலீசார் தடியடி
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் பகுதி கடந்த ஒருவார காலமாகவே பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில், மதுரை அவனியாபுரம் அருகே 2 நாட்களுக்கு முன் தற்காலிக வாடிவாசல் அமைத்து 10-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

பிரபலங்கள் வலியுறுத்தல்
பிரபல இயக்குனர் அமீர், நடிகர் ஆர்யா, அவரது சகோதரர் சத்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கவுதமன் ஆகியோர் 2 நாட்களுக்கு முன் அலங்காநல்லூர் வந்ததால் பதற்றமும், பரபரப்பும், பத்திரிகையாளர்களின் முற்றுகையும் இங்கே அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பிரபல செய்தி சேனல் நிருபர்களும், தேசிய சேனல் நிருபர்களும், பத்திரிகையாளர்களும் அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.

முதலிடம்
இதற்கிடையே, நேற்று காலையில் இருந்தே அலங்காநல்லூரில் காளை மாடுகளை சிலர் அவிழ்த்து விடுவதும், போலீசார் அவர்களை விரட்டியடிப்பதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான செய்திகளும், வாக்குவாதங்களும் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago