முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பம்: அகிலேஷ் யாதவுக்கே சைக்கிள் சின்னம் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக, அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சமாஜ்வாடி கட்சியின் அகில இந்திய தலைவராக அவரே நீடிப்பார் என்றும் தேர்தல் ஆணையம தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 19-ம் தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

7 கட்டமாக தேர்தல்

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில் இங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் படுவேகமாக நடந்து வருகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முந்தைய ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய ஆளும்கட்சியான சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பகுஜன் சமாஜ்

இந்த தேர்தலை தனித்து சந்திக்கும் மாயாவதி மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரமே வெளியிட்டார்.இவற்றுக்கிடையே, இம்மாநிலத்தில் தங்களது புதுக்கணக்கை துவங்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பழைய கணக்கை புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், இங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் மனு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் தந்தை முலாயம்சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவிடையே கடும் அதிகாரப்போட்டி நிலவுகிறது. கட்சியின் இரு அணியும் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி இருந்தனர். இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.  இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இருதரப்பும், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்களின் ஆதரவுக் கையெழுத்து அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் இருவரும் தாக்கல் செய்தனர்.

கட்சியும் - சைக்கிளும் ...

இந்தநிலையில் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னமும் , சமாஜ்வாதி கட்சியும் சொந்தம் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது . சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவே செயல்பாடுவார் என்றும் தேர்தல் ஆணையம் அங்கரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் ஏமாற்றத்தில் உள்ளார். இவ்விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது.இதில் அகிலேஷ் யாதுவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கி உத்தவிட்டுள்ளது.

முதல்கட்ட பிரச்சாரம்

இந்நிலையில், தந்தை முலாயமுடன் உச்சகட்ட மனக்கசப்பில் இருக்கும் அகிலேஷ் யாதவ் நாளை, மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறார். அன்றைய தினமே கட்சியின் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிடுகிறார். பின்னர், 19-ம் தேதி ஆக்ரா மற்றும் அலிகர் நகரில் நடைபெறும் இரண்டு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கும் அகிலேஷ், அங்கிருந்து தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

சூறாவளி சுற்றுப்பயணம்

இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்துகொண்டு, தொகுதி பங்கீடும் செய்ய தீர்மானித்துள்ள அகிலேஷ், முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்