முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பொங்கல் விழா

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      நீலகிரி

ஊட்டியில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பொங்கல் விழா கொண்டாடி அன்னதானம் வழங்கினர்.

ஊட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் தேங்காய் கடை கேட் வியாபாரிகள் மற்றும் தேங்காய் கடை கேட் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 18ம் ஆண்டு தை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவினையொட்டி தேங்காய் கடை கேட்டில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் மார்க்கெட் இளைஞர்கள் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாமுகமது, செயலாளர் குலசேகரன், நிர்வாகிகள் ரபீக், சாதிக் மற்றும் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். விழாவில் ஏராளமான பாரம் தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் உண்கொண்டனர். இது குறித்து பாரம் தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் அய்யாசாமி கூறுகையில், கடந்த 18 ஆண்டுகளாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். விழாவினையொட்டி அன்னதானம் வழங்கி வருகிறோம். இதற்கு மார்க்கெட் வியாபாரிகள் உதவி செய்கின்றனர். இந்த அன்னதானத்தில் தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்