பழநி பாதயாத்திரை தொடங்கியது

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      ஈரோடு

தைப்பூசத்தை ஒட்டி, முருக பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். தைப்பூசத்தையொட்டி பழநிக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்கின்றனர். தை மாதம் நேற்று முன்தினம் பிறந்த நிலையில், முருக பக்தர்கள் அன்றைய தினமே, பாதயாத்திரையை தொடங்கி விட்டனர். இன்னும் பலர் விரதம் தொடங்கியுள்ளனர். இவர்கள் தைப்பூச நாளில், பழநி கோவிலுக்கு செல்லும் வகையில், யாத்திரையை தொடங்குவர். நேற்று முன்தினம் தொடங்கிய நாமக்கல், சேலம், கரூர் மற்றும் ஈரோடு பக்தர்கள், ஈரோடு மாவட்டம் வழியாக பழநிக்கு நடந்து சென்றனர். எனவே, இரவில் கனரக வாகனங்களை ஜாக்கிரதையாக இயக்க, ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: