சிப்காட்டில் மில்லில் திருடிய ஊழியர் சிறையில் அடைப்பு

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      ஈரோடு

சென்னிமலைசிப்காட்டில் தனியார் மில்லில், திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னிமலையை அடுத்த, ஈங்கூர் சிப்காட்டில், சிவா டெக்ஸ் யார்ன் மில்ஸ் உள்ளது. இங்கு பராமரிப்பு பிரிவில் பணியாற்றுபவர் பார்த்திபன். இவர், 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, திருடிச்சென்று விட்டதாக, சென்னிமலை போலீசில், நிறுவன மேலாளர் புகார் அளித்தார். இதன்படி, எஸ்.ஐ ரவிசந்திரன் வழக்குப் பதிந்து, பார்த்திபனை கைது செய்தார். திருடிய பொருட்களை அவரிடம் இருந்து, போலீசார் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: