முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சார்பில் பிரதமருக்கு கோரிக்கை மனு: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : தமிழக அரசுக்கு வறட்சி நிவாரண நிதியாக 39, 565 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சார்பில் மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு கோரிக்கை

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1000 கோடி உடனடியாக  வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண நிதி

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இது தொடர்பான மனுவை பிரதமர் அலுவலகத்தில்  நேற்று அளித்தார். தமிழக அரசின் மனுவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை சமாளிக்க நிவாரண நிதியாக 39,565 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்தும் மத்திய அரசின் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வர்தா புயல் தாக்கியது நினைவிருக்கலாம். இந்த புயலால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. அரசின் துரித நடவடிக்கையால்  ஒரு வாரத்தில் இயல்பு நிலை திரும்பியது. வர்தா புயல்நிவாரண நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கனவே ஒரு கடிதம் எழுதினார். தற்போது வறட்சி நிவாரண நிதி கேட்டும் முதல்வர் சார்பில், பிரதமருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago