முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன்: கருணாஸ்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன. நான் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறேன். எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.அவரது ஆத்மா இன்னும் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறேன். என்னுடைய ஒரே தகுதி விசுவாசம்தான். எனவே கடைசிவரை அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவேன்.ரஜினிகாந்தை பற்றி நான் பேசியதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. சமீபத்தில் எந்த ஒரு விழாவிலும் நான் அப்படி பேச வில்லை அவரை அரசியலுக்கு அழைக்கவும் இல்லை.கடைசி வரை எனது அமைப்பு அ.தி.மு.க. கூட்டணியில் தான் தொடரும். இது உறுதி.

இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்