முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு எதிராக காங். போராட்டம்: பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் போராட்டக்குழு அமைப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் போராட்டக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டு மக்கள் மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்தித்து வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம், கள்ளப்பணத்தை ஒழிப்போம், தீவிரவாத, ஊழலை ஒழிப்போம் என அறிவித்தவர்கள் தற்போது தங்களது நோக்கங்களை மாற்றிக் கொண்டு ரொக்கமில்லா பரிவர்த்தனையை பற்றி பேசி மக்களை பா.ஜ.க.வினர் ஏமாற்றி வருகிறார்கள்.மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல்காந்தியின் அறிவுறுத்தலின்படி நாடு தழுவிய அளவில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இத்தகைய போராட்டங்களை ஒருங்கிணைக்க அகமது படேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தென்மாநில ஒருங்கிணைப்பாளராக கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரும், தமிழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ரகுமான்கானும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி பணமதிப்பு நீக்க எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் நடத்துவதற்கு, மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இணைத் தலைவராக கே.எஸ்.அழகிரி, அமைப்பாளராக ஜே.எம்.ஆரூண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த குழுவின் உறுப்பினர்களாக பி.விஸ்வநாதன், கே.கோபிநாத், எஸ்.விஜயதரணி, ஜே.ஜி.பிரின்ஸ், எம்.என்.கந்தசாமி, கோபண்ணா, கே.செல்வப்பெருந்தகை உள்பட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்