முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒடுக்க உலகிற்கு இந்தியாவின் உதவி தேவை பதவி விலகிய அமெ.தூதர் ரிச்சர்ட் வர்மா உறுதி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அமெரிக்காவில் ஒபாமா பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவரால் இந்தியாவிற்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா பதவி விலகுகிறார். அவர் இன்னும் இரு நாளில் பதவி விலகும் நிலையில், தீவிரவாதத்தை ஒடுக்க உலகிற்கு இந்தியாவின் தலைமை தேவை என கூறினார். அமெரிக்காவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஒபாமாவின் கட்சியான ஜன நாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டார். அவரை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர்  டொனால்டு டிரம்ப் தோற்கடித்தார். டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து , இந்தியாவில் அமெரிக்க தூதராக உள்ள ரிச்சர்ட் வர்மாவும் பதவி விலகுகிறார். புதிய  ஜனாதிபதி டிரம்ப் 20தேதி பதவி ஏற்கும் போது தனது தூதர் பதவியை விட்டு ரிச்சர்ட் வர்மா விலகுகிறார்.

பதவி விலகும் தூதர் ரிச்சர்ட் வர்மா நேற்று கூறுகையில், தீவிரவாதத்தை ஒடுக்க உலகிற்கு இந்தியாவின் தலைமை தேவை. பாகிஸ்தானை மையமாக கொண்ட தீவிரவாதத்தால்  இந்தியாவிற்கு சவால் உள்ளது.தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக இந்தியா , அமெரிக்கா  இடையே நல்ல உறவு உள்ளது. இரு நாட்டு உளவுத்துறையும் தீவிரவாத நடமாட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும்  40 ஆயிரம் பேரை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் தேர்வு செய்துள்ளது. எனவே தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இதனை ஒடுக்குவதற்கு இந்தியாவின் தலைமையினை உலகம் எதிர் நோக்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்