கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர் கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சாலையில் கக்கநல்லா என்ற இடத்தில் சோதனை சாவடி உள்ளது. இங்கு மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரனையில் அவரது பெயர் இஸ்மாயில்(38) என்பதும், அவர் கேரளா மாநிலம் நிலம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டிலிருந்து கேரளா மாநிலம் நிலம்பூருக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இஸ்மாயிலை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: