முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றாண்டு விழா : எம்.ஜி.ஆர் சிறப்பு தபால் தலை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய சிறப்பு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. அதை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில், சசிகலா அவருடைய திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மலரை வெளியிட்டார்.

நூற்றாண்டு விழா

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆரின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

சசிகலா பொறுப்பேற்பு

அ.தி.மு.க பொதுக்குழு கடந்த 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் பொதுசெயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத்திய அரசுக்கு வேண்டுகோள்

அப்போது அவர் பேசுகையில்., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஜனவரி 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது திருஉருவம் தாங்கிய தபால் தலை வெளியிட மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தபால் தலை வெளியீடு

அந்த வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆரின் உருவம் தாங்கிய தபால் தலை சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவி்ல் எம்.ஜி.ஆரின் சிறப்பு தபால்தலையை தமிழ்நாடு தலைமை அஞ்சல் அதிகாரி டி.மூர்த்தி வெளியிட, அதனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்று கொண்டார்.

மாலையணிவித்து மரியாதை

முன்னதாக எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, உதயகுமார், மணிகண்டன், வளர்மதி, சரோஜா, ராஜலட்சுமி, ஒ.எஸ்.மணியன், பாஸ்கரன், பெஞ்சமின், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைமைக் கழகத்தில்

எம்.ஜி.ஆரின் பிறந்த நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா, நேற்று காலை 10-45 மணிக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு வந்தார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் திரண்டிருந்த அ.தி.மு.கவினர், தியாகத்தலைவி சின்னம்மா வாழ்க என்று வாழ்த்து கூறி உற்சாகமாக வரவேற்றனர்.

மலர் வெளியீடு

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். அதன் முதல் தொகுப்பினை அ.தி.மு.க அவைத் தலைவர் இ.மதுசூதனனும் இரண்டாம் தொகுப்பினை முன்னாள் அமைப்புச் செயலாளர் நிறைகுளத்தானும் பெற்றுக்கொண்டார்கள்.

நூல் வெளியீடு

இதையடுத்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா சென்னை, கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பாளரால் தயாரிக்கப்பட்டுள்ள ``வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர்.'' என்ற நூலை வெளியிட்டார். அதன் முதல் . பிரதியை, அ.தி.மு.க தேர்தல் பிரிவுச் செயலாளரும், சட்டமன்ற துணைசபாநாயகருமான பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலையை விழா மேடையில், அ.தி.மு.க பொருளாளரும் முதலமைச்சருமான. பன்னீர்செல்வம் வழங்கினார். அதனை அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா பெற்றுக்கொண்டார்.

நிதியுதவி

அடுத்த நிகழ்வாக, கழகப் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவரும், ஆரம்பகால கழக உறுப்பினரும், அ.தி.மு.க சுவரொட்டிகளை ஒட்டுபவருமான. நடராஜனின் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து, கழகத்தின் சார்பில் 50,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள். அதே போல், திருச்சி, ஹோலி கிராஸ் கல்லூரியில்., விலங்கியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஸ்ரீதேவியின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணமாக 20,000 ரூபாய்க்கான வரைவோலையை `புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்'-டில் இருந்து வழங்கினார்.

குடும்ப நலநிதி

இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் , மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வழங்கினார். குடும்ப நலநிதி மற்றும் கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொண்டவர்கள், அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.பி.கலைராஜன் விருகை ரவி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், , மாணவர் அணி,செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், எம்.பி. வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் சேதுராமன் , சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. , விவசாயப் பிரிவு செயலாளர் வைரமுத்து, மீனவர் பிரிவு,செயலாளர் எம்.சி.முனுசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், , அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago