முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருளர் இன மக்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் கல்லங்கொல்லை கிராமத்தில் இருளர் பகுதியில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறைக்கட்டளை மற்றும் உத்திரமேரூர் தீயணைப்புத்துறையின் சார்பில் இருளர் இன மக்களுக்கு பேரிடர் மேளாண்மை விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. முகாமில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறைக்கட்டளை திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். தீயணைப்புத்துறை அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வெனீஸ்குமார் வரவேற்றார். உத்திரமேரூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து இயற்கைப் பேரிடர் குறிப்பாக நிலநடுக்கம், சூனாமி, மழைவெள்ளம், குடிசைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் தீ விபத்து, தொற்று நோய்கள் போன்ற பேரிடர் காலங்களில் தங்களை தாங்களே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுதல், உயிர் சேதங்களைத் தவிர்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், போன்றவற்றை விளக்கி கூறி செய்முறை பயிற்சிகள் அளித்தனர். நிகழ்ச்சியின் ஏற்ப்பாடுகளை களப்பணியாளர் ரேனுகாதேவி சிறப்பாக செய்திருந்தார். கல்லங்கொல்லை கிராம இருளர் இன மக்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago