ரோஷாநகரத்தில் விளையாட்டு விழா மற்றும் நற்பணி மன்றம் திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      சென்னை
G pundi 1

கும்மிடிப்பூண்டி அடுத்த ரோஷாநகரம் பகுதியில் ரோஷா நகரம் இளைஞர் நற்பணி மன்றத்தை திங்களன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் துவக்கி வைத்தார்.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த ரோஷாநகரத்தில் நற்பணி மன்ற துவக்க விழா மற்றும் பொங்கல் பண்டிகை விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக சேவகரும்,அதிமுக பிரமுகருமான காட்வின் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ், செயலாளர் மனோஜ்,பொருளாளர்கள் நலன், டில்லி முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் எம்.திருநாவுக்கரசு, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.வேதநாயகம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், புழல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இ.நாராயணன், வழக்கறிஞர் ஐசக் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் ரோஷாநகரம் இளைஞர் நற்பணி மன்றத்தை துவக்கி வைத்ததோடு

பொங்கல் பண்டிகைக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 

விழாவில் தமிழக பாரம்பரிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கலைக்குழு அமைப்பாளர்கள் பாக்கியராஜ்,சுதன்,டேவிட், நற்பணி மன்ற அமைப்பாளர்கள் டேவிட், சசிகுமார், சுனில் ரன்ஐன் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: