முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது கடினம் : கேப்டன் விராட் கோலி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

சமன் செய்தார்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போடடியில் விராட் கோலி சதம் அடித்து முத்திரை பதித்தார். 177-வது ஒருநாள் போட்டியில் விளையாடி 27-வது சதத்தை பதிவு செய்தார். 2-வது இன்னிங்சில் அதாவது சேசிங்கில் விராட் கோலி 17 செஞ்சுரியை எடுத்து டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார். இதில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் (15) எடுத்த டெண்டுல்கரின் சாதனையை முறயடித்தார்.

சாத்தியமில்லை
விராட் கோலிக்கு தற்போது 28 வயதுதான் ஆகிறது. இதே திறமையுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் விளையாடினால் அவர் டெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் தகர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கருடன் என்னை ஒப்பிட்டு வருவது எந்த விதத்திலும் நியாயமில்லை. அவரை போன்று 24 ஆண்டுகாலம் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாட இயலாது. 100 சதம் அடிக்க முடியாது. அவரது சாதனைகள் நம்ப முடியாதவை. டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவரது சாதனையை எட்டுவது சாத்தியமில்லை.

வெற்றியின் ரகசியம்
ஆனால் நான் அதிலும் மாறுபட்டவனாக இருக்கவே விரும்புகிறேன். நான் போட்டியை விட்டு செல்லும்போது சிறப்பான நிலையிலேயே செல்வேன். நெருக்கமான நபர்கள் நிறையபேர் நம்மை சுற்றி வைத்துக் கொள்ளும்போது கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. மேலும் அதற்காக கூடுதல் நேரத்தையும் செலவிட வேண்டியது வரும். அதனால்தான் அதிர்ஷ்டவசமாக நெருக்கமான நிறையபேரை நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுவே எனது வெற்றியின் ரகசியம்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago