முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி ஆட்சியில் மத கலவரங்கள் குறைந்துள்ளன : முக்தர் அப்பாஸ் நக்வி சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பிறகு மதக்கலவரங்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் கடந்த 32 மாதங்களாக பெரிய அளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி சூழல்
மாநில சிறுபான்மை ஆணையத்தின் ஆண்டு மாநாட்டை துவக்கி வைத்த மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-நாட்டின் வளர்ச்சி சூழலில் சிறுபான்மையின மக்களையும் மோடி அரசு அங்கமாக  கொண்டு வந்ததுள்ளது. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சியில் அரசியல் கட்சிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். ஏனெனில் கட்சிகளின் நிலைப்பாடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது.

கலவரங்கள் குறைந்துள்ளது
சிறுபான்மையினர் மக்களின் அரசியல் சாசன உரிமை நம் நாட்டில் மிகவும் பலமாக உள்ளது. இதை யாரும் பலவீனப்படுத்த முடியாது. தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி அமைத்த 32 மாதங்களில் நாட்டில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. மதக்கலவரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. சமூக கட்டமைப்புக்கு  பங்கம் விளைவிக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தடுக்க விரும்புகிறோம். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சகித்துக்கொள்ளாது. நாட்டில் வளர்ச்சியில் நாமும் சம பங்காளிகள் என்று சிறுபான்மையினர் உணரும் போதுதான் அவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க முடியும்” என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்