முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிற அமைப்பினர் தலையிட்டு சூழ்ச்சி செய்ய வாய்ப்பு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜல்லிக்கட்டை ஆதரித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிற அமைப்பினர் தலையிட்டு சூழ்ச்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் மாணவர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஜல்லிக்கட்டை ஆதரித்து மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் போராட்டம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்றார். அவர் மேலும் கூறுகையில், அவசர சட்டம் பிறப்பித்தாலும் கூட அதையும் உச்சநீதிமன்றம் தடை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டத்தையும், அவர்களின் உணர்வுகளையும் தாம் மதிப்பதாக கூறிய அவர், இந்த போராட்டங்களில் பிற அமைப்பினர் தலையிடுவது ஏன் என்று கேள்வி விடுத்தார். மேலும் மாணவர்களை பயன்படுத்தி பிற அமைப்பினர் சூழ்ச்சி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த சூழ்ச்சியில் மாணவர்கள் சிக்கி விடாமல் அமைதிகாக்க இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தடைசெய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அது போராட்டம் தான் என்றும் ஜல்லிக்கட்டு அல்ல என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago