முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தடை சட்டத்தை நீதிமன்றம் உடனே நீக்கவேண்டும்: சிவகுமார் வேண்டுகோள்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்டுள்ள தடை சட்டத்தை நீதிமன்றம் உடனடியாக நீக்கவேண்டும் என்று சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிவகுமாரும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைபோல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு பிடிக்கும் விளையாட்டு தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில் மாட்டின் முதுகில் கத்திகளைச் சொருகி நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ்நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?  வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த ‘பீட்டா’ சட்டம். உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்னமும் தினம் லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது என்ன? ‘கோமாதா நம் குல மாதா என்று பசுவை கும்பிடும் பாஜக அரசுக்கு இது தெரியாதா? பசுவதை சட்டம் இதற்குப் பொருந்தாதா? சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள். மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதை புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தை உடனே நீக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago