முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும் : முன்னாள் அமைச்சர் சின்னைய்யா,நடிகை வாசுகி பேச்சு

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      சென்னை
Image Unavailable

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,பொன்னேரி தொகுதியில்,சோழவரம் ஒன்றியச்செயலாளர் கார்மேகம் ஏற்பாட்டில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலரானை தலைமையில் மாபெறும் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை பஜாரில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் டி.கே.எம்.சின்னைய்யா மற்றும் தலைமை கழக பேச்சாளர்,நகைச்சுவை நடிகை வாசுகி ஆகியோர் அண்ணா தி.மு.க ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் செவ்வனே நடைப்பெறும்.எதிர்கட்சியின் பிளவு நுட்பம் எடுபடாது என்று பேசினர்

 

அண்ணா.தி.மு.க நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினத்தை நூற்றாண்டு விழாவாக கொண்டாட கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார்.அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,சோழவரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் டி.கே.எம்.சின்னைய்யா மற்றும் தலைமை கழக பேச்சாளர்,நகைச்சுவை நடிகை வாசுகி ஆகியோர் கடந்த கால புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவலைகளை பகிந்துக்கொண்டனர்.மேலும் அ.தி.மு.கவின் கடந்த கால சாதனைகளை விளக்கி கூறினார்.மேலும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் அரசு நலத்திட்டங்களான விலையில்லா 20 கிலோ அரிசி,விலையில்லா மிக்சி,கிரைண்டர், பேன்,பொங்கல் போன்ற விழா நாட்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை, குழந்தைகளுக்கான திட்டங்கள்,முதியோர் நலத்திட்டங்கள், 1 ரூபாய்க்கு இட்லி, சாம்பார் சாதம், தயிர், புளி சாத திட்டம், பெண்களுக்கு நாப்கின், மகபேறு திட்டங்கள், சத்துணவு திட்டங்கள், கல்வி திட்டங்கள் அனைத்தையும் விளக்கி கூறினர். தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் அண்ணா.தி.மு.கவினை பிளவு படுத்தும் நோக்கில் செயல்படுத்தும் எதிர்கட்சியின் பிளவு நுட்பம் எடுபடாது என்றனர்.

இக்கூட்டத்தில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்தனம்,மாவட்ட விவசாயப்பிரிவு இணைசெயலாளர் பி.கே.செல்வம்,சோழவரம் ஒன்றிய இலக்கிய அணித்தலைவர் எம்.ஜி.ஆர்.குமரேசன்,இலக்கிய அணிச் செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆமூர் தன்சேகர் கழக நிர்வாகிகள் ஆத்தூர் சற்குணம்,மாணவரணி சீனிவாசன்,நாலூர் முத்துகுமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.வழக்கறிஞர் குணசேகரன் நன்றியுரை ஆற்றினார்.இதே போன்று கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கழக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் பெஞ்சமின்,கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.கே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் கலந்துக்கொண்ட பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைப்பெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்