முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காதுக்கு பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அண்ணாதுரை தகவல்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 11 வயது முதல் 75 வயதுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் செவித்திறன் குறைவுடைய மாணவஃமாணவிகள், சுய தொழில் புரிபவர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், மற்றும் வயது முதிர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் வழங்கப்படவுள்ளது. எனவே காதுக்குப்பின்னால் அணியும் காதொலிக்கருவிகள் பெற விரும்பும் மேற்காணும் தகுதியுடைய கேளாத நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப உணவு வழங்கல் அட்டையின் நகல், படிப்பவர், பணிபுரிபவர், சுயதொழில் புரிபவர்கள் அதற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட உரிய சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-14, தரை தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து காதுக்கு பின்னால் அணியக்கூடிய காதொலிக்கருவி பெற்று பயனடையலாமெனவும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்- 04362-236791-ற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்