திருச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளகாக புகைப்பட கண்காட்சி

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      திருச்சி
pro try

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, அமராவதி கூட்டுறவு வளாகம் முன்பு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகளை விளக்கும்; வகையில் ஒன்றிய அளவிலான சிறுப்புகைப்படக் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

 

நலத்திட்டங்கள்

 

தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியபுரம், இலால்குடி, மண்ணச்சநல்லூர்;, புள்ளம்பாடி மற்றும் வையம்பட்டி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து (கடந்த 07.01.2017 முதல் 09.01.2017) வரை ஸ்ரீரங்கத்தில் ஒன்றிய அளவிலான சிறுப் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்படி திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, அமராவதி கூட்டுறவு வளாகம் முன்பு ஒன்றிய அளவிலான சிறுப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இப்புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட விபரங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, இல்லத்தரசிகளின் இன்னலைப் போக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பசுமை வீடுகள் போன்ற திட்டங்களின் சாதனைகள் பற்றியும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. , மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கணே~;குமார்(திருச்சி), மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, அமராவதி கூட்;டுறவு வங்கித் தலைவர் ஜெயபால், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் இளஞ்செல்வி, பழனிஸ்வரி, சித்ரா, ராமையா, மனோகரன், வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, சமுகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் முத்துசாமி, முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலைக்கோட்டைஐயப்பன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: