பெரம்பலூர் வட்ட சிறப்பு மனுநீதி நிறைவு விழாவில் ரூ.1.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      பெரம்பலூர்
pro pmb

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட வடக்குமாதவி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 102 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார்.

 

ரூ.1.26 கோடி உதவி

 

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட வடக்குமாதவி கிராமத்தில் நேற்று (18.01.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் வழி நடக்கும் தமிழக அரசு ஏழை எளிய மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாய பெருங்குடிமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்காகவும், பொருளாதார நிலையில் மேம்பாடு அடையவும், உழவர் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்து, அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் அவரைச் சார்ந்த குடும்பத்தினர்களுக்கு திருமண நிதியுதவி திட்டம், இயற்கை மரண உதவித் தொகை பெறும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்த ஆண்டு நிலவும் கடும் வறட்சியின் காரணமாக எந்த விவசாயியும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் தலைமையில் உயர் அலுவலர்கள் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரடியாக பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு பேசினார்.

 

மானிய விலை

 

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் மூலம் நத்தம் வீட்டு மனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.1,25,75,700- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் 1 பயனாளிக்கு ரூ.10,000- மதிப்பிலான விசைத்தெளிப்பான் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.50,000- மதிப்பிலான பி.வி.சி. பைப்புகள் உள்ளிட்டவைகளையும், ஆக மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.1,26,35,700- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 107 மனுக்கள் வரப்பெற்று, 77 மனுக்கள் ஏற்கப்பட்டும், 30 மனுக்கள் மீது உரிய விசாரணைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரா.பேபி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், பொன்னுதுரை(சமூக பாதுகாப்பு திட்டம்), உதவி வேளாண்மை அலுவலர் பிரேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: