முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி(அசாம்),  பழைய ரூ500, ரூ1000 நோட்டு செல்லாது என்ற அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அசாம்  மாநில தலைநகர் கவுகாத்தியில்  உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியன்று அறிவித்தார். கறுப்பு பணம், ஊழல், வரி ஏய்ப்பு , தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் விளக்கம் அளித்தார். சாதாரண , நடுத்தர மக்கள் ரூபாய் நோட்டு முடிவால் பணத்தை எடுக்க வங்கிகளில் நாள் முழுவதும் காத்து கிடக்கிறார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது . பழைய ரூபாய் நோட்டை மாற்றுவது தொடர்பாக நீண்ட வரிசையில் வங்கிகளில் நாள் முழுவதும் காத்து கிடந்த 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே அரசு ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவை வாபஸ் பெற வேண்டும் என  காங்கிரஸ், திரிணாமுல் வலியுறுத்துவதுடன் நாடு முழுவதும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் நேற்று  அசாம் தலைநகர் கவுகாத்தியில்  உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாக குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பினார்கள். பிரதமர் மோடியே திரும்பிச்செல். மத்திய அரசின் முடிவால் இந்திய பொருளாதாரம் பாதித்துள்ளது என கோஷம் போட்டார்கள். அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago