வருவாய்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      புதுக்கோட்டை
pro p kottai

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்று (18.01.2017) வழங்கினார்.

 

நலத்திட்ட உதவி

 

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகஅரசு வருவாய்த்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உதவிகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இலுப்பூர் வட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 309 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், தாட்கோ திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பில் கறவை மாடுகள் வளர்ப்பதற்கு நிதியுதவித்தொகைக்கான காசோலைகளும், 1 பயனாளிக்கு ரூ.20000 மதிப்பில் காலணி தொழில் செய்வதற்கு நிதியுதவித்தொகைக்கான காசோலையும் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகஅரசு பொதுமக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் விலையில்லா வெள்ளாடு, கறவை மாடுகள் வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே தமிழகஅரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பெற்று பயன் பெற வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், வட்டாட்சியர் (வ.கோ.நே.மு.உ) திருமலை, கூட்டுறவு சங்கத்தலைவர் ராமசாமி, ஆத்மா குழுத்தலைவர் சாம்பசிவம், முன்னாள் இலுப்பூர் பேரூராட்சித்தலைவர் குருபாபு, முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: