முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன், இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்வு

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி : மத்திய பட்ஜெட்டில் சேவை வரி உயர்வதால் செல்போன், ஓட்டல், இன்சூரன்சு மற்றும் ரெயில் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான பணிகளில் மத்திய நிதித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் 1 சதவீதம் சேவை வரியை உயர்த்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முடிவு செய்துள்ளார். அரசின் வருவாயை மேலும் பெருக்குவதற்காக சேவை வரி விதிக்கப்பட திட்டமிட்டுள்ளனர்.

சேவை வரி உயரும்

பண நீக்க மதிப்பால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்கள் இன்னும் அதில் இருந்து மீளாத நிலையில் சேவை வரி விதிக்கப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும். அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி தற்போது 15 சதவீதம் விதிக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு சதவீதம் விதிக்கப்பட்டால் 16 சதவீதமாக உயரும். சேவை வரி விதிக்கப்பட்டால் செல்போன் விலை உயரும். மேலும் ரெயில் மற்றும் விமான கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. ஓட்டல், இன்சூரன்ஸ், புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் மற்றும் டி.டி.எச். சேவை போன்றவற்றின் விலை உயரும்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்