முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டபேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ்வுக்கு ஆதரவாக லாலு பிரசாத் பிரச்சரம் செய்கிறார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

 லக்னோ  - உத்தரப்பிர தேச சட்டபேரவைத் தேர்தலில் முதலமைச்சர்  அகிலேஷ் யாதவ்வுக்கு ஆதரவாக ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் பிரச்சரத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டபேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வுக்கும், அவரது மகனும், அம்மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில், கட்சியின் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிபிரிவுக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இத்தேர்தலில் அகிலேஷ் யாதவ்வுக்கு, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பதாவது,

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் அகிலேஷ் யாதவ் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் லாலு பிரசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்