முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்பட உணவு விற்றால் ஆயுள் தண்டனை : மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி  - கலப்பட உணவுப்பொருள், பானங் களைத் தயாரிப்போர் மற்றும் விற்போருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) 272 மற்றும் 273-வது பிரிவுகளின்படி, கலப்பட உணவுப் பொருள் மற்றும் பானங்களைத் தயாரிப்போர், விற்போருக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுகிறது.  ஆனால் கலப்பட உணவுப் பொருள் என்று தெரிந்தே விற்றால் தான் இது பொருந்தும். அதே நேரம், கலப்பட உணவுப்பொருள் சட்டத்தின் (1954) கீழ் சிறிய குற்றங் களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.

மாநில அரசுக்கு அதிகாரம்
மேலும் கலப்பட உணவுப் பொருள் என்பது பொதுப்பட்டிய லில் வருவதால், மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசு களும் சட்டம் இயற்ற முடியும். அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநில அரசுகள், இத்தகைய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஐபிசி-யில் திருத்தம் கொண்டுவந்தன. அதேநேரம், போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் இருந்தால் ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனையை நீதிமன்றங்கள் வழங்கவும் இந்த சட்டத் திருத்தங்கள் வகை செய்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த விஷயத்தில் நிலையான அறிக்கை தாக்கல் செய்யுமாறு

மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படை யில், சட்ட ஆணையம் தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. அதில், “கலப்பட உணவுப்பொருள் மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கொண்ட பானங்களைத் தயாரிப் போர் மற்றும் விற்போருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் அபராதத் தொகையை லட்சக் கணக்கில் விதிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்