முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத இயக்க தளபதி சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவத இயக்க தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேடுதல் வேட்டை
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டம் ஹாஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல மணி நேரங்கள் நடைபெற்ற இந்த சண்டையில், பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆயுதங்கள் பறிமுதல்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா  இயக்க தளபதி அபு முசா சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து, அவர் வசமிருந்த துப்பாகிகள், தோட்டாக்கள் மற்றும் இன்ன பிற ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago