செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      கடலூர்
001

செஞ்சி,

 

செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொணலூர் கிராமத்தில் புதன் அன்று நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு அதிமுக செஞ்சி ஒன்றிய செயலர் அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளர் கே.நாராயணன், ஊராட்சி செயலர் நாகராஜ் ஆகியோர் வரவேற்றனர். திரைப்பட இயக்குனர் வி.ஜெயபிரகாஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் லட்சுமிசேகர், மாவட்ட மகளிர் அணி தலைவர் மல்லிகாகுமார், அனந்தபுரம் நகர செயலர் அரிராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வி.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொணலூர் செயலர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: