முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்துறையில் ரூ. 1.25 கோடிக்கு கொப்பரை ஏலம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஈரோடு

 

பெருந்துறை ஜன 20 ஈ பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,485 மூட்டைகளில் 1 லட்சத்து 59 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 81.35-க்கும், அதிகபட்சமாக ரூ. 84-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 60.85-க்கும், அதிகபட்சமாக ரூ. 77.75-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்