தேசிய இளைஞர் வார நிறைவு விழாசிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது:கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo05

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற தேசிய இளைஞர் வார நிறைவு விழாவில் சிறந்த இளைஞர் மன்றத்திற்கான விருதினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்...திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் நேற்று நடைபெற்ற தேசிய இளைஞர் வார நிறைவு விழாவில் போளுர் வட்டம், மாம்பட்டு கிராமம், விவேகானந்தர் முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கான ரூ.25 அயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும், இளைஞர் நற்பணி மன்றங்களுக்கு விளையாட்டு கருவிகளும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கி பேசுகையில் ‘நான் பி.எஸ்.சி. (வேளாண்மை) மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தேசிய மாணவர் படையில் இருந்ததற்காக சலவைப்படி ரூ.450 கடைசியாக வழங்கப்பட்டது. இந்த பணத்தில் சுவாமி விவேகானந்தரின் 9 தொகுதி புத்தகங்களை வாங்கி, கோடை விடுமறையில் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தேன். தன்நம்பிக்கை அவசியம் குறித்த இந்த புத்தகங்களை படித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். இளைஞர்களுக்கு ஆற்றல் நிறையாக இருக்கிறது, தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் உலகத்தில் பல்வேறு சாதனைகளை அவர்கள் படைக்கலாம். ஓவ்வொரு ஆன்மா திறன் தெய்வீகமாக உள்ளது, ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை கடந்து சமத்துவத்தின் முக்கியத்துவம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை யாரும் நடைமுறை படுத்துவதில்லை. நாடு, வீடு, சமுதாயம் ஆகியவற்றில் காலம் காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது, இதனை மாற்ற முடியாது என அனைவரும் நினைக்கிரார்கள். எனக்கு எதற்கு வம்பு என்றிருந்தால் எதையும் சாதிக்க முடியாது. இளைஞர்கள் உடல் உறுதியுடன் இருப்பது முக்கியமானது’ என்றார். இந்நிகழ்ச்சியில், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.விஜயாராவ், அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் கே.ஆர்.அறிவுச்செல்வி மற்றும் இளைஞர் மன்றங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: