முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 ½ கோடி தொண்டர்கள் கொண்ட அ.தி.மு.க. என்னும் இரும்பு கோட்டையை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது:அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா  பொதுக்கூட்டத்தில் குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நடைபெற்றது.  விழாவிற்கு நகரசெயலாளர் குருநாதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் மாணவரணி செயலாளர் அம்மா வடிவேலு, முன்னாள் நகர செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பூக்கடை ரவி வரவேற்றார்.இந்த கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமைகழக பேச்சாளர் கபிலர்மலை Ex.MLA சரஸ்வதி, அரூர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அ.தி.மு.க தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் விளக்கி பேசினார்கள்.          கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், அ.தி.மு.க நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.  அவர் திட்டங்களும், மக்கள் நலத்திற்கான சேவைகளும்தான் இதற்கு காரணம்.  இதே போன்று ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான திட்டங்களால் அவர் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து உள்ளார். ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள் அவர் மறைந்த பிறகும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  1 ½ கோடி தொண்டர்கள் கொண்ட அ.தி.மு.க என்னும் இரும்பு கோட்டையை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.  எதிர்கட்சிகளின் சூழ்ச்சி எடுபடாது என்றார்.                கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட இணை செயலாளர் செல்வி-திருப்பதி, மாவட்ட பேரவை செயலாளர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தகவூர் விஜியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திராளாக கலந்து கொண்டனர்.  முடிவில் நகர துணைசெயலாளர் அறிவாளி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்