முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிகை மற்றும் புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 488 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 340, புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 148 மாணவ ஃ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.பின்பு  காகல்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பேசியதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்தியாவிலேயே 29 மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் செய்யாத நலத்திட்டங்களை மறைந்த  முதல்வர் அம்மா அவர்கள் கல்விக்காக அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கினார்கள்.  பெற்றோர்களுக்கு இல்லாத அக்கரை நமது மறைந்த   முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு பள்ளி குழந்தைகளின் மீது அளவற்ற பற்றினால் கல்வியில் மேன்மை அடைய வேண்டும், கல்வியில் தமிழகம் முதன்மை பெற வேண்டும் என்கிற வகையில் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பேருந்து அட்டை, புத்தகம், பென்சில், பேனா, பை உள்ளிட்ட 14-வகையான கல்வி உபகரணங்களை தமிழக அரசு வழங்கிக் கொண்டு வருகிறது.  அதுமட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்பதற்காக ஒரே மாதிரியான சீருடைகளை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்வி பயின்று தங்களின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் . மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படும்.  மேலும் இப்பள்ளிக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, பர்னிச்சர் வகைள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் பேசினார்.

மேலும் புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2015- 2016-ம் கல்வியாண்டில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் ஏற்படுத்திய தமிழ், கணிதம், அறிவியில், இயற்பியல், வேதியில், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியை பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க செய்ய வேண்டும் என ஆசிரிய பெருமக்களிடம் வலியுறுத்தினார்இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மது (எ) ஹேம்நாத், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர்கள் சிக்னபையா, சரவணக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.ஜெயசாரதி, வட்டாட்சியர் ஜெ.சி.முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் சுமதி, ஆகியோர் கலந்து கொண்டனர் விழா நிறைவில் தெலுங்கு மொழி (பாடம்) ஆசிரியர்கள் மஞ்சுநாத் மற்றும் கந்தசாமி ஆகியோர் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்