முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு:கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், சங்கீத மகாலில் 28வது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் ஆ.அண்ணாதுரை,  தலைமையில் நேற்று (19.01.2017) நடைபெற்றது. 28வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் அவர்கள் பேசியதாவது,சாலை விதிகளை கடைபிடித்து நடக்க வேண்டும்.  பள்ளி மாணவ மாணவியர்கள் சாலைகளில் எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலை கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவிர்க்க வேண்டும்.  கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஒட்ட வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 232 நபர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளனர்.   இந்த இறப்பிற்கு காரணம் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமலும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்குவதால் விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

பேருந்து பயணத்தின் போது இளைஞர்கள் முதியவர்கள் அமருவதற்கு இடம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.  சாலை விதிகள் தொடர்பாக தங்களுடைய பெற்றோர்கள் உற்றார் உறவினர்களுக்கு மாணவ மாணவியர்கள் தெரியப்படுத்த வேண்டும்.சாலை விதிகள் பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்த கல்வி கற்று, வாழ்க்கையில் நல்ல நிலையில் எட்ட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆ.அண்ணாதுரை,  பேசினார்.சாலை பாதுகாப்பு வார விழா 17.01.2017 முதல் 23.01.2017 வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற முதல் 3 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியில் மா.ஜெயலெட்சுமி முதல் பரிசும், மு.காவியா இரண்டாம் பரிசும், பி.பாலாஜி மூன்றாம் பரிசும் வழங்கி கலெக்டர் ஆ.அண்ணாதுரை,  பாராட்டினார்.முன்னதாக இந்தியன் செஞ்சுலுவை சங்கம் மூலம் சாலை பாதுகாப்பு  குறித்து கிராம விழிப்புணர்வு பயண வாகனத்தை கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த வாகனம் 23.01.2017 வரை ஒவ்வொரு கிராமமாக சுற்றி வரும். இந்நிகழ்ச்சியில்  துணை போக்குவரத்து ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜி.ரெங்கநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கி.விஜயகுமார், பிரபாகரன், கருப்பையன், இந்தியன் செஞ்சுலுவை சங்க பொருளாளர் முத்துகுமார், செயலாளர் ஜோசப்  மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago