ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கால்நடை தீவன மையங்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      ராமநாதபுரம்
coo

ராமநாதபுரம்-- ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளின் தேவையை கருத்தில் கொண்டு 15 உலர் கால்நடை தீவன மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார். குறைதீர் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்பார்த்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 31 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 104 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3ஆயிரத்து 656 எக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 எக்டேர் பரப்பளவில் கொத்தமல்லியும் ஆக மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 237 ஹக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில்

  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்; மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திட மத்திய கண்காணிப்புக்குழு விரைவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு உதவித் தொகை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கால்நடை தீவனம் இதுதவிர வறட்சி காலத்தில் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு போதிய அளவு தீவனம் வழங்கிட ஏதுவாக கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ராமேஸ்வரம் வட்டத்தில் ஒரு உலர் கால்நடைத் தீவன மையமும், மீதமுள்ள ஏழு வட்டங்களில் வட்டத்திற்கு தலா இரண்டு உலர் கால்நடைத் தீவன மையங்கள் என மொத்தம் 15 உலர் கால்நடைத் தீவன மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தீவன மையங்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை அரசு மானிய விலையில் பெற்று பயன்பெறுவதற்கு தங்களது வட்டத்தில் உள்ள உலர் கால்நடைத் தீவனம் மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து மதிப்பீடு பெறப்பட்டு ஏலமிடுவதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. விரைவில் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்படும். இதுதவிர வேளாண்மை பொறியியல் துறையின் மூலம்

பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள், கூட்டுறவு துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உர வகைகள் வழங்கப்பட்டும் போதிய அளவில் இருப்பும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 15.01.2017 வரை 9,879 விவசாயிகளுக்கு ரூ.28.16 கோடி மதிப்பில் பயிர்க்கடனுதவியும், 672 விவசாயிகளுக்கு ரூ.3.66 கோடி மதிப்பில் விவசாய நகைக்கடனுதவிகளும் ஆக மொத்தம் 10,551 விவசாயிகளுக்கு ரூ.31.82 கோடி மதிப்பிலான பயிர்க்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளின் நலனை உறுதி செய்திடும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அலி அக்பர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஹேமா சலோமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.தமிழ் வேந்தன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: