முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்களுடன் இணைந்து அனைத்து சங்கத்தினர் அறப்போராட்டம்:

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-. திருமங்கலம் நகரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அனைத்து சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அறப்போராட்டம் நடத்தினார்கள்.இதனிடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அலங்கரித்து அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கூட்டத்தின் நடுவே திடீரென்று அவிழ்த்து விடப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டம்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை உடனடியாக நடத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு பொதுமக்கள் பெருமளவு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம்முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மாணவர்களின் போராட்டத்திற்கு திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து சங்கங்கள் மற்

றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுத்து போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். அனைத்து சங்கங்கள் பங்கேற்பு: திருமங்கலம் நகரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உடனடியாக நடத்திட வலியுறுத்தியும் திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு அனைத்து கடைகளையும் அடைத்து விட்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.மணிசேகர் தலைமையில் நகரின்முக்கிய வீதிகள் வழியே பிரமாண்டமான பேரணி நடத்தினார்கள்.பின்னர் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்திற்கு திரண்டு வந்த அனைத்து சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களுடன் இணைந்து மனித சங்கிலி போராட்டம் மற்றும்

அறப்போராட்டம் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன:

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் மினிவேன்களில் இரண்டு அலங்கரிக்கப்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.பின்னர் அவைகள் மினிவேன்களிலிருந்து கீழே இறக்கப்பட்டு திடீரென்று ஜல்லிக்கட்டு போட்டி போன்று கூட்டத்தினுள் அவிழ்த்து விடப்பட்டது.காளைகள் சீறிப்பாய்ந்து கூட்டத்தில் ஓடியதை கண்டு மகிழச்சியடைந்த இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவற்றை அடக்க முயன்றனர்.அப்போது காவல்துறையினர் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து காளைகள் மீண்டும் வேன்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்