முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் சர்வதேச ஆக்கி மைதானத்தில்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் சர்வதேச ஆக்கி விளையாட்டு மைதானத்தின் அருகில் வீரர்கள் தங்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது.

 

 

 

இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் மாநில ஆக்கி சங்க தலைவர் செல்லத்துரை அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான சப்-ஜுனியர் மகளிர் ஆக்கி விளையாட்டு போட்டிகள் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 வீராங்கணைகளும், 200 ஆக்கி விளையாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். லீக் போட்டிகளில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டிகள் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளன. இன்று(சனிக்கிழமை) அரைஇறுதி போட்டிகளும், நாளை(ஞாயிற்று கிழமை) இறுதி போட்டியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். விழாவில், இந்திய ஆக்கி சங்க தலைவர் மரியம்மாகோஷி, முன்னாள் ஒலிம்பிக் ஆக்கி வீரா அர்ஜுனா விருதுபெற்ற பிலிப் உள்ளிட்ட ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

 

 

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி போட்டிகளின்போது இந்திய ஆக்கி அணிக்கான மகளிர் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழுவை சேர்ந்த கோவிந்தா நேரில் பார்வையிட்டு வீரர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறார். இந்த வீரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இந்திய ஆக்கி அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். ராமநாதபுரத்தில் இந்தியாவில் வேறு எங்கும் முழு வசதிகளுடன் இல்லாத அளவிற்கு சர்வதேச தரத்திலான ஆக்கி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்திய ஆக்கி சங்கத்தினர் இங்கு சர்வதேச ஆக்கி அணி பயிற்சி அளித்தல் மற்றும் சர்வதேச ஆக்கி போட்டிகளை நடத்த தகுதிகளின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இங்கு சர்வதேச போட்டிகளும், பயிற்சி போட்டிகளும் நடைபெறும். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி விளையாட்டு போட்டிகளின்போது வீராங்கணைகள் மற்றும் அதிகாரிகளுக்கு சிறிய அளவில் கூட குறை இல்லாத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தது. பின்தங்கிய இந்த மாவட்டத்தில் இதுபோன்ற வசதிகளுடன் மைதானம் அமைந்துள்ளதை கண்ட தேர்வு குழுவினர் மற்றும் ஆக்கி சங்கத்தினர் வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளை கூட இந்த பகுதியில் நடத்தி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

 

 

 

இவ்வாறு முன்னேற்ற பாதையில் செல்வதால் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு வசதியாகவும், இதற்காக இங்கு வரும் வீரர்களை தங்க வைப்பதற்கும் வசதியாக இந்த பகுதியில் சுமார் 24 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. தன்னார்வலர்களின் உதவியுடன் நிதி உதவி திரட்டி நமக்கு நாமே திட்டத்தில் அரசின் பங்குத்தொகை பெற்று ரூ.1 கோடி செலவில் இந்த தங்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஓரிருவாரங்களில் தொடங்கும். இதுதவிர, இந்த மைதானத்தில் இரவு போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அதிக சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் ரூ.1 கோடி செலவில் பொருத்தப்பட உள்ளது. இந்த பணிகளும் தன்னார்வலர்களின் நிதிஉதவியுடன் நமக்குநாமே திட்டத்தில் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார். அப்போது போட்;டிகளின் ஒருங்கிணைப்பு செயலாளர் சேதுபதி, பொருளாளர் கோவிந்தராஜ், ஒலிம்பிக் வீரர் பிலிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago