முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூர் ரயில் தாக்குதலுக்கு குக்கர் வெடிகுண்டு பயன்படுத்தியது அம்பலம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா  - கான்பூர் ரயில் தாக்குதலுக்கு குக்கர் வெடிகுண்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒருவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடம்புரண்டது
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த நவம்பர் மாதம் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இந்த சுவடு மறைவதற்குள் அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த 2 ரெயில் விபத்துகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை அமைப்புகள் புலனாய்வுப்பணிகளில் ஈடுபட்டு வந்தன.

குக்கர் வெடிகுண்டு
இந்த நிலையில் பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தின் கோரசகன் ரெயில் நிலையம் அருகே கடந்த அக்டோபர் 1-ம் தேதி குக்கர் வெடிகுண்டு ஒன்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்து வந்த போலீசார், உமா சேகர் படேல், மோதிலால் பஸ்வான், முகேஷ் யாதவ் ஆகிய 3 பேரை சமீபத்தில் மாவட்ட தலைநகர் மோதிகாரியில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 3 பேர் நேபாளத்திலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேபாள போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ. ஆதரவு
மோதிகாரியில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கும் தாங்களே காரணம் என ஒப்புக்கொண்டனர். நேபாள போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ள ஒருவர்தான் இதற்காக பணம் அளித்ததாகவும் கூறினர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவின் பேரிலேயே அரங்கேற்றி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரஷர் குக்கர் வெடிகுண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இந்த தாக்குதல் அரங்கேற்று இருப்பதாக பிடிபட்டவர்களில் ஒருவனான மோதிலால் பாஸ்வான் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான். 10 லிட்டர் பிரஷர் குக்கர் இதற்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மீண்டும் தடயவியல் அறிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago