முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் “கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் மாயனம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்கள் மற்றும் லயன்ஸ் கிளப்  பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது நவீன மின் மாயனத்திற்கு தேவையான 1  ஆம்புலன்ஸ் வாகனம், 2 குளிர்சாதன பெட்டிகள், உடனடியாக வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் மின் இணைப்பு வசதிகள் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும் மயானத்தில் எரியூட்டு செய்ய பயற்சி பெற்ற ஒரு நபரை பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின் மாயனம் செயல்பாடுகளை லயன்ஸ் கிளப் மற்றும் பேரூராட்சிகள் துறை இணைந்து நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்க எடுக்கப்படும். மேலும் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை பேரூராட்சி நிர்வாகம் மூலம் செயல் படுத்திடவும், மின் கட்டணத்தினை 1 வருடத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் செலுத்திட தெரிவிக்கபட்டது. இதற மராமத்து பணிகள் அரிமா அறக்கட்டறை மூலம் செய்ய கலெக்டர் அவர்கள் அறிவுரை வழங்கினார். பின்பு பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட குப்பை கிடங்கை பார்வையிட்டு இங்குள்ள குப்பைகளை விரைவில் தனியார் உதவியாளர்களை கொண்டு அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன்  உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மரியஎல்சி, பேரூராட்சிகள் உதவி செயற்; பொறியாளர் நடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோ.பாலசுப்பிரமணி, பொறியாளர்  ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர்,  ஒன்றிய ஆணையாளர் சீனிவாச சேகர், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன், அரிமா சங்க பிரதிநிதிகள் சுந்தரேசன், மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்