முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      சேலம்

சேலம், ஓமலூர் அருகே உள்ள திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியும் புதிய தலைமுறை (கல்வி) யும் இணைந்து +2 ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டனர். +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல குறிப்புகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். தேர்வுக்கு தயாராகும் முன்னர் எவ்வாறு ஒவ்வொரு பாடத்தையும் படிக்க வேண்டும் என்ற பல மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி “வெற்றி படிகள்” எனும் தலைப்பில் 07.01.2017 சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திரஜ்லால் காந்தி, தலைவர், , நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், “ கல்வி மாணவர்களின் அறிவை மட்டும் வளர்க்காமல் ஓர்  நல்ல மதிப்புமிக்க குடிமகனாகவும் மாற்ற வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள +2 மாணவர்கள் வாழ்வில் ஓர் உன்னத நிலையை அடைந்து வெற்றி பெற வேண்டும்” என ஆசீர்வதித்து வாழ்த்தினார்.   முனைவர்.ஐ.எம்.ஆரோக்கியசாமி, முதுநிலை ஆசிரியர்/கணிதம், செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளி, சேலம், முனைவர். எஸ். மனோகர், முதுநிலை ஆசிரியர் / இயற்பியல், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, குகை, சேலம், முனைவர். எஸ்.பாலசுப்ரமணியன், முதுநிலை ஆசிரியர்  வேதியியல், அரசு மேல்நிலைப்பள்ளி, முருங்கப்பட்டி,   முனைவர். வி.கோவிந்தசாமி, முதுநிலை ஆசிரியர் / தாவரவியல், நீலாம்பால் சுப்ரமணியம் உயர்நிலைப்பள்ளி, சேலம் நல்ல தகவல்களை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினர். மேலும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நிறைய கருத்துகளை பதிவு செய்தனர்.தங்கராஜ், மேலாளர், புதிய தலைமுறை (கல்வி),  நிகழ்ச்சியில் பேசும்போது, “ இந்த நிகழ்ச்சி மூலமாக +2 மாணவர்கள் நன்கு பயனடைந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய  காரணமாய் விளங்கிய திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரியின்  நிர்வாகத்தையும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு பேச்சாளர்களையும் மனமார பாராட்டினார். அர்ச்சனா மனோஜ்குமார், செயலர், “+2 மாணவர்கள் யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொண்டு மனதை ஒருநிலைபடுத்தி படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.முன்னதாக, முனைவர்.வி.முரளி பாஸ்கரன், முதல்வர், வரவேற்புரை ஆற்றினார். முனைவர். எஸ். சரவணன், துறைத்தலைவர் / கணினித்துறை மற்றும் டீன் / அட்மீஷன், நன்றியுரை ஆற்றினார். இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் , சேலம் மாவட்டத்திலிருந்து சுமார்  1000க்கும் அதிகமான +2 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு பயனைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்