முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆணைப்படி, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தது. அப்போது  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா  ஆணைப்படி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க, அவசர சட்டத் திருத்தத்தை  விரைந்து கொண்டு வர வலியுறுத்தி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில், டெல்லியில், உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாகத் திகழும் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. 

தம்பிதுரை பேட்டி :
அதன்பிறகு துணை சபாநாயகர் தம்பிதுரை  நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளை அவர் விவரித்தார். இந்த தடைக்கு காரணமே மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசும், அதில் அங்கம் வகித்த திமுகவும் தான்  என்று தம்பிதுரை குற்றம்சாட்டினார். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக  மல்லுக்கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

வீடுவாசல்  வேண்டாம் :

இந்த போராட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மட்டும் இன்றி பல்வேறு பகுதிதகளிலும் நடைபெற்றது. கோவை, ஈரோடு மற்றும் ஊட்டியிலும் இந்த போராட்டம் நடந்தது. சென்னை மெரினா கடற்கரையி்ல் லட்சக்கணக்கான இளைஞர்கள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகிறார்கள், வாடிவாசல் திறக்கும்வரை வீடுவாசலை நினைக்கமாட்டோம் என்று மதுரை மாவட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்