தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண்பரிசோதனை முகாம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      திருநெல்வேலி
Salai Pathukappu Varam

தென்காசி

28 வது சாலைப்பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.பி.சுரேஷ் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் வி.சசி வரவேற்றார். நெல்லை அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவர் டாக்டர் அன்கிதா சிறப்புரை ஆற்றினார். இந்த முகாமில் 180க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தார்கள். விழாவில் அனைத்து ஓட்டுனர் பயிற்ச்சிபள்ளி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் , அரவிந்த் கண்மருத்துவமனையிலிருந்து பியூலா, சாருலதா, முத்துலெட்சுமி, கவிதா, சில்வியா, செண்பகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாம் வரும் 23 தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தனர். விழா முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: