விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டம் ஜனவரி 2017 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தலைமையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது.

கூட்டத்தின் துவக்கத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)  அனைத்து அலுவலர்களையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் மற்றும் அனைத்து விவசாயிகளையும் வரவேற்றார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கலெக்டர்  மாவட்டத்தில் இயல்பான மழையளவு 1060 மி.மீ., 2016ம் வருடத்தில் 563.67 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது.  47 சதவீதம் குறைவான மழையே பெறப்பட்டுள்ளது.  இந்த வருடம் மழை போதுமான அளவு இல்லாததால் மாநில அரசு வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது எனவும், இந்த மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  தலைமையில் மாவட்டத்தில் பயிர்கள் பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் கலெக்டர்  விழுப்புரம் மாவட்டத்தில் 26 இடங்களில் தீவனக் கிடங்கு அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், கால்நடைகள் அருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கவும், போர்வெல் சீரமைக்கவும், கால்நடை மருத்துவமனையில் போர்வெல் போட்டு நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள 150 வேலை நாட்களை பயன்படுத்தி நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்தார்.

அடுத்ததாக விவசாயிகள் வறட்சி பாதிப்பை முறையாக கணக்கெடுக்கவும், பாதித்த விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுக்கவும், விவசாயிகளின் கரும்பை எவ்வளவு காலப் பயிராக இருந்தாலும் சர்க்கரை ஆலைகள் வெட்டு உத்திரவு வழங்கவும், காப்பீடு நிறுவனம் மூலம் முறையான நிவாரணம் கிடைக்கவும், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.இறுதியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)  நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ர.செல்வசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பா.சுரேஷ், தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் (விழுப்புரம்) திருமதி.பாரதி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் (கள்ளக்குறிச்சி) அருட்பெருஞ்ஜோதி, செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் அ.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர்  விழுப்புரம் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சேதுராமன் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: