முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து மதத்தவர் அதிபர் ஆவார் : பராக் ஒபாமா நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வரும்காலத்தில் அமெரிக்காவின் அதிபராக இந்து மதத்தைச் சேர்ந்தவர் பொறுப்பேற்பார் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றி வந்த ஒபாமாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைகிறது. அவர் பத்திரிகை யாளர்களிடம் விடைபெற்றார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்காவில் இனம், மதம் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. திறமையின் அடிப்படையில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுதான் அமெரிக்காவின் பலம். அதன் அடிப்படையில் வரும் காலத் தில் ஒரு பெண்ணோ, லத்தீன் அதிபரோ, யூத அதிபரோ, இந்து அதிபரோ பதவியேற்கக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஒபாமா  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ஆக்கப்பூர்வ அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக ஒபாமா குறிப்பிட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தபோது தனக்களிக்கப்பட்ட வரவேற்பை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த ஒபாமா, இந்தியாவின் 68-வது குடியரசு தினத்துக்கான வாழ்த்தை முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே அனைத்து மட்டங் களிலும் வளர்ச்சியோடு கூடிய ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்ததாகக் கூறி பதிலுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமரானபோது முதலில் வாழ்த்து கூறிய சர்வதேச தலைவர்களில் ஒபாமாவும் ஒருவர். அதன் பிறகு, இதுவரை இல்லாத வகையில் இரு தலைவர்களும் 8 முறை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்